முல்லைத்தீவு – ஏ-35 வீதியில் 28 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் வள்ளிபுனம் காளி கோவிலடி பகுதியில் பாலம் ஒன்றின் பாதிப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியூடாக பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு செல்கின்றவர்கள் மாற்று வழியாக மாங்குளம் வீதியை பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பகுதியில் பாலத்தை தற்காலிகமாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.