கிளிநொச்சியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழையினால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தினால் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியிருந்த பொது மக்களை நேற்றிரவு முதல் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கன மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404 குடும்பங்களை சேர்ந்த 7762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் 320 குடும்பங்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதில் கரைச்சி பிரதேசத்தில் 120 குடும்பங்களும், பளையில் ஒரு குடும்பமும், கண்டாவளையில் 189 குடும்பங்களும், பூநகரியில் 10 என நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
கரைச்சி பிரதேசத்தில் 567 குடும்பங்களும், பளையில் 169 குடும்பங்களும், கண்டாவளையில் 1635 குடும்பங்களும், பூநகரியில் 33 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதனை தவிர பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.