2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் ஆம் திகதி நிறைவுக்கு வந்த யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரை தானே வழிநடத்தியதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சஷ் சரத் பொன்சேகா மீண்டும் அறிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரை தானே முன்னின்று வழிநடத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தற்போது அவரது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அறிவித்துவரும் நிலையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையினாலும் அறிக்கையிடப்பட்டுள்ள போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் விவகாரத்தில் ஸ்ரீலங்காவின் கடந்த அரசாங்கம் மாத்திரமன்றி தற்போதைய அரசாங்கமும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள தரப்பினரும் மறுப்புத் தெரிவித்துவரும் நிலையிலேயே போரை வெற்றிக்கு வழிநடத்தியது யார் என்ற உரிமைப் போராட்டத்தில் கோட்டாபயவும் – சரத்பொன்சேகாவும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.