மூதூரில் முன்னாள் போராளிகள் நால்வர் கைது!

திருகோணமலை – மூதூர் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதூர், சம்பூர் பகுதிகளில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டைபறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்சேனை பகுதிகளைச் சேர்ந்த இந்த நால்வரும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் எனத் தெரிவிக்கப்டுகிறது.

புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து ரி 56 ர துப்பாக்கி , அதற்குரிய மகசின்கள் இரண்டு, கைக்குண்டுகள் மூன்று,

டெட்னேற்றர்கள் மூன்று, ரவைகள் 31 என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here