இந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.Indians-rescued-from-sinking-vessel-by-French-navy க்கான பட முடிவு

அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர் கவனித்தனர்.

இரு விமானிகள், ஒரு நீச்சல் வீரர், மற்றும் ஹெலிபேட் இயக்குபவர் ஆகியோருடன் 7 கடல் மைல்கள் தூரத்தில் அழைப்பு வந்த இடத்தை நோக்கி ஒரு ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது.

அட்லான்டிக் பெருங்கடல் மற்றும் கரிபியன் கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரட்டை தீவு நாடான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் நாட்டுக்கு சொந்தமான ‘தர்பார் குயீன்’ என்னும் சரக்கு கப்பல் முற்றிலுமாக மூழ்கிய நிலையில் அதில் இருந்த சிலர் கப்பலின் மேல் பகுதியில் தொற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை மீட்பு படையினர் கவனித்தனர்.

உடனடியாக கடலின் மீது மிதவை ஹெலிபேட் அமைத்து மூழ்கிய கப்பலின் நுனிப்பகுதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை முதல்கட்டமாக மீட்டனர்.

அவர்களை அவ்வழியாக வந்த ஒரு வர்த்தக கப்பலில் இறக்கிவிட்டு மீண்டும் மூழ்கிய கப்பலுக்கு சென்றனர்.

இரண்டாவது கட்டமாக 4 பேரையும், மூன்றாவது கட்டமாக 4 பேரையும் பத்திரமாக மீட்டு, அருகாமையில் உள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கஸார்ட்ஸ் என்ற கப்பலுக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட 12 பேரும் இந்தியர்கள் என தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில் சிறு காயங்களுடன் இருந்தவர்களுக்கு அந்த கப்பலில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அவர்கள் 12 பேரும் பிரிட்டன் நாட்டு சொகுசு கப்பலான ‘சீ பிரின்சஸ்’ மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல் டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைமை தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here