ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை தனது அரசாங்கம் அங்கீகரிக்காது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு முதலாவது தடவையாக இன்று ஷங்ரிலா விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

இவற்றை விட தற்போது வடக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியைப் பெறுவதில் மிக முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. எனவே இந்த பழைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாம் மறந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணை சட்டவிரோதமானது. எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கம் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்.

இதேவேளை மக்களை கடத்த வெள்ளை வேன்களைப் பயன்படுத்தியாக வரும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமானது தனது வெளியுறவுக் கொள்கை குறித்து நடுநிலை நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here