தெலங்கானா போலீசாரைப் புகழ்ந்த பிரபலங்கள்.!

தெலங்கானாவில் 4 பேரை என்கவுன்டர் செய்த போலீசாருக்கு கல்லூரி மாணவிகள், பெண்கள் என பலர் பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர்கள் விஷால், நாகா அர்ஜூன், நடிகைகள் குஷ்பு, சமந்தா உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

குஷ்பு : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

அந்தவகையில் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ள என்கவுண்ட்டர் சம்பவம் நிச்சயமாக எல்லா தாய்மார்களுக்கும் நிம்மதியை தரும். ஒரு தாயாக நானும் இதை பாராட்டுகிறேன்.

நந்திதா சுவேதா : பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி நடப்பது பெண்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் வாழ்வதற்காக வெட்கப்படுகிறேன்.

தெலுங்கானாவில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவத்தை பாராட்டுகிறேன். சம்பவம் எந்த இடத்தில் நடைபெறுகிறதோ, அதே இடத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

நாகார்ஜூனா: பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் ஆன்மா சாந்தியடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here