நேற்றைய போட்டியின்போது, புவனேஸ்வர் குமார் 5-வது ஓவரை வீசும் போது
கேட்சாக அமைந்தது.
ஆனால் ரிஷப் பந்த் அந்த கேட்சை தவறவிட்டார்
இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி கூச்சலிட்டனர்.
இதனால் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த கோலி கோபமடைந்தார்.
ரசிகர்களை பார்த்து இதுபோன்று தேவையில்லாமல் கூச்சலிட வேண்டமென்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
கோலியின் இந்த செய்கை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த் கேட்சை தவறவிட்டால் தோனி,
தோனி என்று கூச்சலிட வேண்டாமென்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதே கோலி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.