முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்த நிலையில்
கொட்டித் தீர்த்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையான எ -35 வீதியில் 28 ஆவது கிலோ மீட்டர் பகுதியில்
பாலம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைகள் மற்றும் வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியூடாக பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு செல்கின்றவர்கள் மாற்று வழியாக மாங்குளம் வீதியை பயன்படுத்துமாறு
மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு இன்று காலையில் பல்வேறு வீதிகளின் ஊடாக வெள்ளம் பாய்ந்து வருகின்ற
பலர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போக்குவரத்து மேற்கொள்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட10
குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பல்வேறு குடும்பங்களும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற
பாரிய குளங்களில் ஒன்றாகிய முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படவிருக்கிறது. மக்களையும் அவதானமாக இருக்குமாறு கோரப்படுகின்றனர்.