ரஷ்யா படைகள் உக்கிரேனின் தலைநகர்கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் முப்படைகளையும் கொண்டு கொடூரமான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது.
உக்கிரேனின் 21 இராணுவதளம் மற்றும் விமானத்தளம் மற்றும் என்னை குதங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யா 4வது நாளாக தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் தமது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த யுத்தத்தின் போது ரஷ்யா இராணுவம் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது இரண்டுநாள் யுத்தத்தின் பொது 3500 படைகளை இழந்துள்ளது.
யுத்த டாங்கிகள் 102 ,கவச வாகனங்கள் 536, ஆட்லரி 15, போர் விமானங்கள் 14 உலங்குவானுறுதிகள் 8 , மல்ட்டி பேரல் 1,
உலகின் இரண்டாவது வல்லரசு ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள உக்கிரேனிடம் கையாளும் போர்தந்திரம் இதுவரைக்கும் எதுவும் இல்லை.
இன்னும் கடுமையான இழப்புக்களை ரஷ்யா இராணுவத்துக்கு ஏற்படுத்தி இருக்கலாம் போர் நடக்கும் என்று முன்கூட்டி உக்கிரேனுக்கு நன்று தெரியும்.
போருக்கு தேவையான எதிரியின் பலம் பற்றிய துல்லியமான கணிப்புக்களை உக்கிரேன் இராணுவம் செய்யவில்லை
இதுதான் இன்றைய பின்னடைவுக்கு கரணம் யுத்தம் வந்தால் வெற்றி தோல்வி வேறு அனால் ரஷ்யா படைகளுக்கு அதிகமான இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருந்துள்ளது.
ரஷ்யா இராணுவத்தின் டாங்கிகள் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக வருகின்றது அனால் அதை தாக்கி அளிப்பதற்கு வாய்ப்பு இருந்தும் அதை உக்கிரேன் இராணுவம் சரியாக கையாளவில்லை
டாங்கிகளையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நேற்று தான் பிரான்ஸ் 900 வழங்கியுள்ளது.
பல நாடுகள் இன்னும் உக்கிரேனுக்கு போர் தளபாடங்களை வழங்கிவருகின்றது.
அமெரிக்காவின் கணிப்பு 48 மணித்தியாலத்தில் உக்கிரேனின் தலைநகரை ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று கூறியுள்ளது.
தலைநகர் கீவ்வை ரஷ்யாவசம் வந்துவிடடாள் போர் நின்றுவிடாது உகிரேனை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா இந்த யுத்தத்தை செய்கின்றது தனது எதிர்கால நலனுக்காக தான் இந்த போரை ரஷ்யா கையில் எடுத்துள்ளது.
உலகநாடுகள் பல தடைகளை ரஷ்யா மீது விதித்தாலும் போர் நின்றுவிடவில்லை இங்கிலாந்துக்கு 50 km தொலைவில் ரஷ்யா தனது இராணுவம் மற்றும் போர் தளபாடங்களையும் நகர்த்தியது இது ஐரோப்பா கண்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.