லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2
திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள நாசரத்பேட்டை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
நேற்று படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட கிரேன் திடீரென விழுந்தது. இதனால், ப்ரொடக்ஷனில் பணியாற்றிய
இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் உதவியாளர் சந்திரன் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரேதம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்புகளில் செட் அமைக்கப்படும் போது அங்கு ஒளிக்காக தளத்தில் பிரமாண்ட லைட்கள் அமைக்கப்படும்.
இந்த லைட்களை தூக்கிப்பிடிக்க industrial crane என்ற கிரேன் உபயோகப்படுத்தப்படும்.
நேற்று நடந்த விபத்தின் போது, கிரேனை இயக்கியவர் அனுபவம் இல்லாத, புதியவர் என்று தெரிய வந்துள்ளது.
அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன், சமநிலை தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக கீழே இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.