ஜெயலலிதாவின் வழக்கை வரலாறு “தலைவி” பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகள் ஒருவரான கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி கிண்டலுக்கு உள்ளானது.

இந்நிலையில், த அயன் லேடி என்ற பெயரிலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்க ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இது குறித்து நித்யா மேனன் பேசியதாவது,

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்து இருக்கிறோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதனை இயக்குனர் பிரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.

ஜெயலலிதா மாதிரி நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது. அதனால் அவர் மாதிரியே நடிக்கவும் என்னை தயார் செய்து வருகிறேன். ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என பேசியுள்ளார்.

தலைவி போஸ்டர் வந்ததும் நித்யா மேனன் இவ்வாறு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், நித்யா மேனன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here