எழுத்தாளர் அஜயன்பாலாவின் சினிமா வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், கதையை திருடியவர்கள் கதையை ஒத்துக் கொள்வதே இல்லை என்றார்.
இரண்டு கதைகளும் ஒன்று போல இருக்கின்றன. உங்களுக்கு முன்னாள் அவருக்கு அதுபோன்ற எண்ணம் வந்துள்ளது
என்று பக்குவமாக சொன்னால் கூட ஒத்துக் கொள்ள மனம் வருவதில்லை. அடுத்தவரின் ஆடையை எடுத்து ஆல்டர் செய்து உடுத்தினால்
ஃபிட்டிங் சரியாக இருக்கும். ஆனால் துணி பழையதுதான். படத்தை திருடி படம் எடுத்தால் உருப்பட முடியாது. நீண்ட காலம் சினிமாவில் நீடிக்க முடியாது என்றார்.