திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது.

குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. மீட்புக்குழுவினர், குழந்தையை மீட்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டர் .

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ”எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூடப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here