பலாங்கொடையிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மரக்கறி ஏற்றிவந்த லொறியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் செப்பல்டன் பகுதியில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
சாரதியின் கட்டுப்பாடை மீறிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், லொறியில் காணப்பட்ட மரக்கறிகள்சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.