ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள்

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகள் ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல்,

குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுப்படைகளும் இணைந்து

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே

அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கஸ்னி மாகாணத்தின் அன்டர் மாவட்டத்தில்

இன்று பாதுகாப்பு படையினர் 6 பேர் ஒரு வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த வாகனத்தை இடைமறித்த தலிபான் பயங்கரவாதிகள் சிலர்

பாதுகாப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here