நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து
அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாலியல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவானார்.
அவ்வப்போது சமூக வலைதளத்தில் தோன்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
நேற்று வெளியிட்ட வீடியோவில் கைலாசாவை அமைத்தே தீருவேன் என்று முழங்கியிருந்தார்.
நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் பெங்களூரு போலீசாருக்கு விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.