இராணுவத்தை தாக்கி துப்பாக்கி அபகரிப்பு.!

வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இரவுக் காவல் பணியை முடித்து திரும்பிய

இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது துப்பாக்கி அபகரிக்கப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இனந்தெரியாத நபர் ஒருவர், இராணுவ சிப்பாயை தாக்கிவிட்டு, துப்பாக்கியை பறித்துச் சென்றதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

பொலிஸார் மற்றும் இராணுவ விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இனந்தெரியாதவரால் பறித்துச் செல்லப்பட்ட இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் ஷந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குறித்த இராணுவ முகாமில் சமையல் பகுதியில் பணியாற்றி வருபவர் என தெரிவித்த பொலிசார் அவரிடம்

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அதே இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here