புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன.

நாடு முழுவதும் அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் காலை 8 மணியில் இருந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி ஆசிரம உரிமையாளரின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் சபி அகமது சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here