கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து
சீனா செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து டெல்லி வழியாக ஷாங்காய்க்கு விமானத்தை இயக்கி வருகிறது.
விமான சேவை நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் பெப்பரவரி மாதம் 14 திகதிவரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இண்டிகோ விமான நிறுவனம் பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 20ஆம் திகதிவரை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.