டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர்.

அவர்களில் 16 பேருக்கு (கப்பல் ஊழியர்கள்) கொரோனா பாதிப்பு இருந்தமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்களை உடனடியாக சொந்தநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கும் படியும் ஜப்பான் அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்படாத 119 இந்தியர்களை அழைத்து செல்ல ஜப்பான் அரசு அனுமதி வழங்கியது.

இதில் மூன்று இந்தியர்களின் மருத்துவ கண்காணிப்பு காலம் நிறைவடையாததால் அவர்கள் தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்படவில்லை.

ப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். 2 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here