சூரரைப் போற்று டீசர் அதிரடி அறிவிப்பு!

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா

இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை

உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி,

தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி

என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்

நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தின் டீசருக்காக ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கி

வருவதாகவும் அதற்கான ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் டீசர் மாறா தீம் இசையுடன் ஜனவரி மாதம் வெளியாகும்

என்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here