அமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மோதல் வலுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து,
இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது
ஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த
தாக்குதலில் அமெரிக்க படைவீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.