ஈராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின்
முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக
அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.