கடந்த மாதம் எரிபொருள் விலையை ஈரான் அரசு உயர்த்தியதற்கு எதிராக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது.
அதில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வரும் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்த அந்நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஈரான் சில பகுதிகளில் இணைய சேவைகளை அரசு முடக்கியுள்ளது.
இதனை அந்நாட்டின் இணைய கண்காணிப்பு சேவை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் குறைந்தது 304 பேர் உயிரிழந்ததாகவும்
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.
ஆனால் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.