ஈரானானது அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைகள் தொடர்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கமாட்டாது என ஈரானிய உச்ச நிலைத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கமெ ய்னி தெரிவித்தார்.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உத்தியோகத்தர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட சம்பவத்தின் 40 ஆண்டு தினத்தையொட்டி ஆற்றிய உரையின்போதே கமெய்னி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலைநகரில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோது அவர் இந்த உரையை ஆற்றியுள்ளார்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண் பதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாடுவது தவறானதாகும் என அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எதுவும் கிடைக்கப்போவதில்லை.
ஏனெனில் அவர்கள் நிச்சயமாக முடிவில் எந்த சலுகைகளையும் வழங்கப்போவதில்லை என அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையி லான சர்ச்சை அந்தத் தூதரகம் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் ஆரம்பமாகவில்லை எனவும் அது 1953ஆம் ஆண்டில் அமெரிக்கா தேசிய அரசாங்கமொன்றை ஆட்சி கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சியொன்றுக்கு ஆதரவு வழங்கிய காலத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளதாக வும் ஆயதுல்லாஹ் அலி கமெய்னி டுவிட்டரில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தி யில் தெரிவித்தார்.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான சி. ஐ.ஏ. இன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிரதமர் மொஹமட் மொஸ்ஸாடெஹ் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு காரணமாகவிருந்த அந்த சதிப்புரட்சிக்கு பிரித்தானியா ஆதரவளித்திருந்தது.
அச்சமயத்தில் பிரதமர் மொஹமட் மொஸ்ஸாடெஹ் ஈரானிய எண்ணெய் தொழிற்றுறைக்கு பொறுப்பாகவிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்ட் ட்ரம்ப் 2015 ஆம் ஆண்டில் ஈரானுடன் செய்து செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை கடந்த ஆண்டு வாபஸ் பெற்றுக்கொண்டது முதற்கொண்டு இரு நாடு களுக்குமிடையி லான பதற்றநிலை அதிகரித்துள்ளது.