ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை
நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன், பிரான்ஸ்,
ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது.
அதில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பெடரிகா மொஜர்னி கூறும்போது, “ஈரானுடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக செலுத்தப்படும் பணம்.
ஈரானுடன் சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடருவதற்கு உதவும் பொருளாதார இயக்கநர்களுக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்க சிறப்பு வழி முறைகளை உருவாக்க வேண்டும்” என்றார்.