கேரளாவில் சபரிமலைக் கோவில் நடை சார்த்தப்படும்போது ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்படும். அது மிகவும் பிரதிபெற்ற நிகழ்ச்சியாக நடத்தப்படும்.
அதை சிறப்பிக்கும் விதமாக 2012 ஆம் ஆண்டு முதல் ’ஹரிவராசனம்’ என்ற பெயரில் கேரள அரசு விருது அறிவித்தது
இசை உலகின் ஜாம்பவான்களாக இருப்போரை தேர்வு செய்து வழங்குகிறது. இந்த விருதை இதுவரை
கே.ஜே.யேசுதாஸ், ஜயன்,பி.ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், கே.எஸ் சித்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இளையராஜாவிற்கு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.