மகாலட்சுமிக்கும் ஈஸ்வர் வருக்கும் தொடர்பா?

பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர்.
சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் நடிகர் ஈஸ்வர் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, நடிகை ஜெயஸ்ரீ அவரது முதல் கணவரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.

நான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் , குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அவர் கூறுவது முற்றிலும் பொய். குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜெயஸ்ரீக்கு கவலை இல்லை.

ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் என்னை போலீசார் மிரட்டி அழைத்துச் சென்று 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக என்னுடைய மனைவி அவதூறு பரப்புகிறார்.

வேண்டுமானால் என்னுடைய மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் இடையே நட்பிருக்கலாம்.

நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் என்பவரது தூண்டுதலின்பேரில் தான் இந்த பிரச்னை நடக்கிறது” என்றார்.

மேலும் தன்னுடைய வீட்டை பறித்து, தன் பெற்றோரை விரட்டி விட்டு அங்கு ஜெயஸ்ரீ குடியிருப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இப்போது புகார் அளித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here