தமிழருக்கு மகிழ்வான செய்தி தரும் இலங்கை அரசு.

இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தின வைபவத்தின் போது சிங்கள

மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் எனவும்,

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

72ஆவது சுதந்திர தின வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதல் சுதந்திர தின நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

முதலாவது இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன்பின்னர் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.

எனினும் இம்முறை கோத்தாபய ஜனாதிபதியாக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் மீண்டும் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here