வீட்டில் சடலமாக கிடந்த பிரபல தொகுப்பாளினி.!

கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘ஜாகீ’ஸ் குக் புக் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து

வழங்கி பிரபலமடைந்தவர் ஜாகீ ஜான். மாடலாகவும், பாடகராகவும் இருந்த ஜாகீ கணவரிடம் விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டின் சமையலறையில்

ஜாகீ மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்களன்று அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த அழைப்பை நீண்ட நேரமாக எடுக்காததால் சந்தேகமடைந்த நண்பர், ஜாகீயின் வீட்டுக்கு அருகில் இருக்கும் மற்றொரு நண்பரை தொடர்பு கொண்டு அதைக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நண்பர் திங்கள் கிழமை இரவு ஜாகீயின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார்.

வீட்டுக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்த நண்பர், பெரூர்கடா காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவே

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் வீட்டினுள் சமையலறையில் ஜாகீ இறந்துகிடந்ததைப் பார்த்துள்ளனர்.

ஜாகீயின் தாயாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here