யாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here