கொழும்பு மற்றும் வடபகுதிக்கு செல்லும் A9 வீதியை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓமந்தை, மாங்குளம், புளியங்குளம் மற்றும் புதூர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில்
பஸ்களில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பஸ்கள் மூலம் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதால், போதைப்பொருள் கடத்தற்காரர்களை கைது
செய்வதற்காவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.