பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரச்சார நடவடிக்கைகளுக்ககாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும் பொதுஜனப் பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி எமது கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் யாழில் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளனர்.

எனவே இக் கட்சியின் வேட்பாளர்கள் மக்களை தேடி செல்கின்றமையினால் மக்கள் தமது ஆதரவை வழங்கிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here