வல்வெட்டித்துறை கடற்பகுதிகளில் மிதந்த கஞ்சா.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை கடற்பகுதிகளில், நேற்று

பெருமளவு கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மயிலிட்டி மகடற்பரப்பில் மூன்று கஞ்சா பொதிகள் கடற்படையினரால்

கைப்பற்றப்பட்டதை அடுத்து வல்வெட்டித்துறை கடற்பகுதியில் மிதந்து சென்ற

ஐந்து கஞ்சா பொதிகளை கடற்படை கைப்பற்றியது.

இவை ஒவ்வொன்றும் 70 கிலோ நிறையுடையவை என்றும் 15 சிறிய பொதிகளில் சுற்றப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்தது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here