சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் வதந்திகள் வேகமாக பரவிவருகின்றன.
சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும், மாட்டுச் சாணம், மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா பரவாது உள்ளிட்ட வதந்திகள் மக்களிடையே பரவியுள்ளன.
இந்தசூழலைப் பயன்படுத்திக் கொண்ட, கொல்கத்தாவைச் சேர்ந்த மாபட் அலி என்பவர், ஒரு லிட்டர் பசு மாட்டுக் கோமியம் 500 ரூபாய், ஒரு கிலோ மாட்டுச் சாணம் 500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார்.
கொல்கத்தாவை டெல்லியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்தத் தொழிலைச் செய்துவருகிறார்.
இந்திய பசு மாட்டின் கோமியம் 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜெர்சி பசுவின் கோமியம் 300 ரூபாய்க்குதான் விற்பனையாகிறது. தற்போதைக்கு தொழில் நன்றாகப் போகிறது’ என்று தெரிவித்தார்.