கைலாசா தேசத்துக்கான கதை தயார் என்று திரைப்பட இயக்குநர் கூற அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

உள்ளூரில் பேமஸாக இருந்த நித்யானந்தா இப்போது உலக பேமஸாகிவிட்டார்.

உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்த தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர். ஆனால், கள நிலவரமோ கலவரமாக இருக்கிறது.

ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

ஒன்றரை ஆண்டிற்கு முன்பே நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இமயமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வதாக கூறிய நித்யானந்தா இமயமலை போகும் சாக்கில், நேபாளம் சென்று போலி பாஸ்போர்ட் ஒன்றை தயாரித்து அதன் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாகவும் கூறப்படுகிறது.

அங்கிருந்து தாய்லாந்து, வெனிசுலா வழியாக ஈக்வெடார் நாட்டில் தனது சொந்த தீவுக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் தனது நாட்டுக்கு கைலாசா என்று பெயரிட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதற்காக கைலாசா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய நெட்டிசன்கள் இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.

அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்திருக்கும் கே-13 பட இயக்குநர் பரத் நீலகண்டன் கைலாசா கதை ரெடி என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here