இந்த வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார்.

வழக்கமாக கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய சுயதம்பட்டத்திற்காகத்தான் அதிகம் பயன்படுத்துவார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள், ஐஸ்வர்யாவை வெறுக்கின்றனர் என்பதை அறிந்ததும் தானும் அவர்களோடு சேர்ந்தால்தான் தனக்கு கைதட்டல் கிடைக்கும் என்று முடிவு செய்த கமல்ஹாசன், இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்தார். மேலும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த மும்தாஜ் மற்றும் யாஷிகாவையும் அவர் கேள்வி மேல் கேட்டு திணறடித்தார்.

கமல்ஹாசனின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் கதறி அழத்தொடங்கினார். மொத்தத்தில் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காதவர்கள் அனைவருக்கும் இன்றைய நிகழ்ச்சி ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ஆனாலும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவை மீண்டும் ஒருமுறை காப்பாற்றி செண்ட்ராயனை வெளியேற்றியதால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் ஞாபகம் வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here