மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, “மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்றார்.

இதன்மூலம் மருதநாயகம் படத்தில் இருந்து விலகுவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார்.

வேறு நடிகரை வைத்து பட வேலைகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் நடிப்பாரா?
அல்லது வேறு நடிகர் தேர்வு செய்யப்படுவாரா? என்பது விரைவில் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here