டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளார்.
இது அவருக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தின் நாயகிகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது
அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.
அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை
படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில் அவரது கேரக்டர் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.