வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி!.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் பாதிக்கப்பட்டு்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையயம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் 21 பாதுகாப்பு அமைவிடங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 20,906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 3147 குடும்பங்களை சேர்ந்த 10,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இவர்களில் 6 பாதுகாப்பான அமைவிடங்களில் 182 குடும்பங்களை சேர்ந்த 628 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 27 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3317 குடும்பங்களை சேர்ந்த 10,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13 பாதுகாப்பான அமைவிடங்களில் 714 குடும்பங்களை சேர்ந்த 2209 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 252 குடும்பங்களை சேர்ந்த 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பாதுகாப்பான அமைவிடத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒரு பாதுகாப்பான அமைவிடத்தில் 23 குடும்பங்களை சேர்ந்த 64 புர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கான சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்டவை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here