அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது.PHOTO: North Korean leader Kim Jong Un welcomes South Korean president Moon Jae-in and at North Korean citizens at Sunan International Airport, Pyongyang North Korea. Sep 18, 2018.

இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.

மத்தியஸ்தராக செயல்படுவதில் தென் கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது.

வட கொரியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவி கிம் ஜாங்-சூக் செவ்வாய்க்கிழமை காலை வடகொரியத் தலைநகர் பியோங்யாங் சென்றடைந்தனர்.

அவர்களை கிம் ஜாங்-உன்னும், அவரது மகைவி ரி சோல்-ஜூவும் வரவேற்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் தென் கொரிய அதிபர் வட கொரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் நடைபெற்ற வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தொடங்கி, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நடத்தும் 3-வது சந்திப்பு இதுவாகும்.

1953ம் ஆண்டு போர் நிறுத்தத்தோடு கொரிய போர் முடிவுக்கு வந்தாலும், எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

இரு நாட்டு தலைவர்களும், அணு ஒழிப்புக்கான நடைமுறை செயல்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here