நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க
கொழும்பு குற்றவியல் பிரிவால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்,
இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர்
பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால்
கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி
நேற்று முன்னிரவு கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றல் முற்படுத்தப்பட்டார்.
கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை
மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக
முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர்,
கோட்டை மஜிஸ்திரேட்டிடம் பொலிஸார் அழைத்துச் சென்றனர். இதன்போது
சிசிடி அலுவலகம் முன் கூடிய சம்பிக்கவின் ஆதரவாளர்கள் பொலிஸாரை நோக்கி “கூ” சத்தமிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐதேகவின் முன்னாள் அமைச்சர்கள்
பலரும் அங்கு வந்து சம்பிக்க ரணவக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.