ராகவா லாரன்ஸ் – வெங்கட் பிரபு கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு படம் உருவாக உள்ளதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிம்புவின் புதிய படம் மகா மாநாடு ரூ.125 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அறிவித்தார்.

பிறகு திடீர் திருப்பமாக மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி -சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வந்தி ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் கிர்ந்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, “கடவுள் அன்பானவர், நல்லதே நினைப்போம்.

நல்லதே பேசுவோம். நல்லதே நடக்கும். எனவே இது நடைபெற்றுள்ளது. லாரன்ஸ் பிரதருக்கு நன்றி. விரைவில் அப்டேட் வரும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here