இந்தியன்-2 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள அனைத்து கலைஞர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில்

காப்பீடு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.

கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன்-2 படப்பிடிப்பின் போது, கிரேன் சரிந்து விழுந்ததில் இணை இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தி,

படத்தின் நாயகனான கமல்ஹாசன், லைகா நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதில் அளித்துள்ள லைகா நிறுவனம், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்ததுடன்,

அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

தங்களின் கடிதம் கிடைத்த 22-ம் தேதிக்கு முன்பாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here