தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் கூட்டணியாக களமிறங்கி பொதுத்தேர்தலில்
நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் கூறினார்.