இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு, மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை கொடுக்கப் போவதாக அமெரிக்காவின் தெற்கு, மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு சீர்திருத்தம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துதல் கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது அல்லது குறைவடைந்துள்ளது.

இலங்கையின் புதிய இராணுவ தளபதிபதியாக சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமை குறித்த தனது ஏமாற்றத்தை அமெரிக்கா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு மனித உரிமை மற்றும் யுத்த குற்றச்சாட்டுகளே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here