தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது
தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மக்களின் நலன்கருதி பொது கொள்கையொன்றை முன்நிறுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர்
கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.