சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் கிம். தொழில் அதிபர். இவர் எளிமையாக வாழ விரும்பினார்.
அதனால் இந்தியா வந்த அவர் கோவையில் உள்ள தியான மையத்தில் சில காலம் தங்கி இருந்தார்.
பின்னர் அங்கு இருந்து வெளியேறிய கிம் எளிமையாக வாழ பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.
கிம் கூறுகையில், “நான் எளிமையாக வாழ விரும்பி கோவையில் உள்ள தியான மையத்திற்கு வந்தேன்.
பின்னர் மனநிம்மதிக்காக மக்களிடம் யாசகம் பெற்று, அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகிறேன்” என்றார்.
கோவையில் வெளிநாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தபடி செல்கின்றனர்.
சிலர் அவருக்கு பணம் கொடுத்து செல்கிறார்கள். பணம் கொடுப்பவர்களை கிம் வணங்கி நன்றி சொல்கிறார்.