பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் பதவி விலகிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ நாளையதினம் (21) பகல் 1.00 மணிக்கு பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
நாளை மாலை மூன்று மணிக்கு அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்.
இதனையடுத்து நாளை 16 பேர் கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது.
பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை கொண்ட அந்த அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நால்வருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா , ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடைக்கால அமைச்சரவை எதிர்வரும் மார்ச் மாதம்வரை பதவியில் இருக்கும் எனவும் அதன்பின்னர் பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்படுமெனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.